26.10.25 முதல் 1.11.25 வரை
எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தொழில் வியாபாரத்தில் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேலதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். பெண்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். சுக்ரன் சஞ்சாரத்தால் கலைத்துறைகளைச் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் கவனம் தேவை.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்க எதிர்ப்புகள் விலகும்.