10.8.25 முதல் 16.8.25 வரை
வாக்கு வன்மையால் ஆதாயம் பெறுவீர்க்ள. தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் சக ஊழியர்களால் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. பெண்கள் திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவர். கலைத்துறையினருக்கு சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் அகலும். பொருளாதார சிக்கல்கள் தீரும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: ஸ்ரீபைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.