10.8.25 முதல் 16.8.25 வரை
செயல்திறமையால் வெற்றி கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உத்யோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே பாசம் அதிகரிக்கும். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். கலைத்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியத்தை செய்து முடிப்பார்கள். வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும்.