search-icon-img
featured-img

கன்னி

Published :

28.9.25 முதல் 4.10.25 வரை

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். விருப்பம் இல்லாத இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிள்ளைகள் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெண்களுக்கு விருப்பம் இல்லாமல் பயணம் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு வீண் மன சங்கடத்திற்கு ஆளாகலாம். எதிலும் கவனம் தேவை. மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க பிணிகள் நீங்கும்.