26.10.25 முதல் 1.11.25 வரை
காரியங்களில் இருந்த தொய்வு நிலை நீங்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். அரசாங்க ரீதியிலான உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை அடியோடு மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். தொழில் விஷயமாக எடுத்து வந்த முயற்சிகள் வெற்றி பெறும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பெண்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எடுக்கும் தொழிலில் கவனம் அவசியம். நிலவி வந்த பிரச்னைகள் மறையும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும்.
பரிகாரம்: பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.