கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.