சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டே யிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவி கேட்டு உறவினர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து போகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் அலட்சியம் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.