01-01-2025 முதல் 31-12-2025 வரை
(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்)
ஆளுமை திறனும், கம்பீரமும் மிக்க சிம்மராசி அன்பர்களே,இந்த வருடம் தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் நடக்கும்.14-4-2025 வரை குரு பகவான் 10ல் இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. சிலருக்கு உத்யோக ரீதியாக இடம் மாற்றம் ஏற்படலாம். மனதுக்குப் பிடிக்காத வேலைகள் செய்ய நிர்பந்திக்கப்படலாம். 14-4- 2025 க்கு குரு பகவான் 11 ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். அஷ்டம சனியின் தாக்கம் குறையும்.29-3-2025 வரை சனிபகவான் 7ல் கண்டகச்சனியாக சஞ்சரிப்பதால், கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு, வெளி ஆட்களின் தலையீட்டால் பிரச்னை, எதிர்மறை சிந்தனை உண்டாகும். 29-3-2025 க்கு பிறகு சனிபகவான் 8 ல் அஷ்டமச்சனியாக சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு, தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களால் பிரச்னை உண்டாகும். இருப்பினும் குரு பகவான் ஏப்ரல் மாதத்தில் இருந்து 11ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச்சனியின் தாக்கம் குறையும்.18-5-2025 வரை ராகு கேது பகவான் முறையே 8-2ல் சஞ்சரிப்பதால் பேச்சால் பிரச்னை, குடும்பத்தில் வீண் வாக்குவாதம், பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வு உண்டாகும். 18-5-2025 க்கு பிறகு ராகு கேது பகவான் முறையே 7-1ல் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம், வெறுப்பு, விரக்தி, எதிர்காலம் பற்றிய எதிர்மறை சிந்தனை எதிலும் பொறுமை, நிதானம், விழிப்புணர்வு தேவை. வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் கூட்டாளிகள், பணியாளர்கள் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்வது அவசியம். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.
பரிகாரம்: விழுப்புரம் அருகே உள்ள சிங்கிரி கோயில் உக்ர நரசிம்மரை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபட்டால் குடும்பம் சுபிட்சமடையும்.