01-01-2025 முதல் 31-12-2025 வரை
(உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)
உழைப்பே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்களுக்கு சவாலான வருடமாக அமையும். 14-4-2025 வரை குரு பகவான் 5ல் சஞ்சரிப்பதால் உறவுகளால் மகிழ்ச்சி, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். 14-4-2025 க்கு பிறகு குரு பகவான் 6 ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. எதிரிகளால் வீண் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்ப தேவைக்காக கடன் வாங்க கூடிய சூழல் ஏற்படும்.29-3-2025 வரை சனி பகவான் 2 ல் சஞ்சரிப்பதால் பேச்சால் பிரச்னை, குடும்பத்தில் வாக்குவாதம், பொருளாதாரங்களில் ஏற்றத்தாழ்வு உண்டாகும். 29-3-2025 க்கு பிறகு சனிபகவான் ஏழரைச் சனியில் இருந்து விலகி 3 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். 18-5 -2025 வரை ராகு கேது பகவான் முறையே 3-9ல் சஞ்சரிப்பதால் மனோபலம் அதிகரிக்கும். 18-5-2025 க்கு பிறகு 2-8 ல் ராகு கேது பகவான் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு உண்டாகும் என்பதால் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை.புதிய வியாபாரம் முயற்சிகள் கைகூடும். இருப்பினும் கூட்டாளிகள் விஷயத்தில் கவனம் தேவை.உத்யோகஸ்தர்களுக்கு புதிய வேலை மாற்றம் உண்டாகும். பதிவு உயர்வு ஊதிய உயர்வு தேடி வரும். இருப்பினும் பணிச்சுமை அதிகரிக்கும்.மாணவர்கள் எதிலும் வெற்றி பெறுவர். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று பாராட்டு பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் இருந்த பிரச்னைகள் நீங்கும். கலைத்துறையினருக்குஎதிர்ப்புகள் விலகும். தொலை தூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும்.
பரிகாரம்: திருநள்ளாரிலுள்ள சனி பகவானை சனிக்கிழமையில் சென்று வழிபட்டுவர மன குழப்பங்கள் தீரும்.