search-icon-img
featured-img

மிதுனம்

Published :

01-01-2025 முதல் 31-12-2025 வரை

(மிருகசீரிடம் 3,4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதம்)

மதி நுட்பத்துடன் செயல்படும் மிதுன ராசி அன்பர்களே,இந்த வருடம் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.14-5-2025 வரை குரு பகவான் 12ல் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள், தொழில் மற்றும் உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள், மருத்துவ செலவினங்கள் உண்டாகும். 14-5-2025 முதல் குரு பகவான் 1ல் ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் கடந்த காலங்களைப் பற்றிய எதிர்மறை நினைவுகள், எதிர்மறை எண்ணங்கள், மனக்குழப்பம், எதிலும் முடிவெடுக்க முடியாத நிலை உண்டாகும். பொறுமை, நிதானம், விழிப்புணர்வு அவசியம். 29-3-2025 வரை சனிபகவான் 9ல் சஞ்சரித்து தந்தை உடல் நிலையில் பிரச்னை, பிதுர்வழி சொத்து பிரச்னை தந்தாலும் பின்னர் அனைத்தும் சரியாகும். 29-3-2025க்கு பிறகு சனி பகவான் 10 ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் மந்த நிலை ஏற்படும். பெரிய அளவு முன்னேற்றம் இருக்காது. இருப்பினும் உங்கள் தனித்திறன் வெளிப்படும்.18-5-2025 வரை ராகு கேது பகவான் முறையே 10-4ல் இருப்பதால் தாய் உடல் நிலையில் பாதிப்பு, வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னை உண்டாகும். 18-5-2025க்கு பிறகு 9-3ல் இருப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். அரசால் அனுகூலம் உண்டு. முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் நட்பும் கிடைக்கும் அதன் மூலம் ஆதாயம் உண்டு. புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். எதிலும் கடின முயற்சிக்கு பின் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினர் தங்கள் வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.

பரிகாரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சித்ரகுப்தரை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபட உடல் ஆரோக்யம் பெறும்.கஷ்டங்கள் நீங்கும்.