search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

01-01-2025 முதல் 31-12-2025 வரை

(கார்த்திகை 2,3,4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1,2 ம் பாதம்)

அன்பால் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ரிஷப ராசி அன்பர்களே, இந்த வருடம் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும்.14-5-2025வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு ஜென்மத்தில் சஞ்சரித்து வீண் குழப்பம், எதிர்மறை சிந்தனை, மன அழுத்தம் ஏற்படுத்துவார். 14-5-2025 முதல் ராசிக்கு 2ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். மற்றவர்களை எளிதில் வசிகரிப்பீர்கள். 29-3-2025 வரை சனி பகவான் 10ல் சஞ்சரித்து தொழில் மற்றும் உத்யோகத்தில் மந்த நிலை, பிரச்னை, முழு மனதுடன் செயல்பட முடியாமை ஆகியன தந்தாலும், 29-3-2025க்கு பிறகு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி, நண்பர்கள் மற்றும் உறவுகளால் ஆதாயம், பொருளாதார நிலை உயர்வு, பதவி உயர்வு, ஊதிய உயர்வு அனைத்தும் கிடைக்கும். 18-5-2025 வரை ராகு கேது முறையே 11,5ல் இருப்பதால் குழந்தைகள் உடல் நிலையில் பாதிப்பு, பூர்வீக சொத்தால் பிரச்னை, மனக்குழப்பம் இருந்தாலும், 18-5-2025 க்கு பிறகு தொழில் மற்றும் உத்யோகத்தில் சில மாற்றங்கள், முன்னேற்றங்கள், தாய் உடல் நிலையில் பாதிப்பு, உறவுகளால் மனக்கசப்புகள், வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் வந்து நீங்கும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். புதிய முயற்சிகள் மிகப்பெரிய வெற்றி பெறும். லாபம் பல மடங்கு அதிகரிக்கும்.மாணவர்களுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். கல்வி, விளையாட்டில் சாதனை படைத்து மற்றவர்களால் புகழப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினருக்கு புதிய முயற்சிகள் கை கொடுக்கும்.

பரிகாரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வணங்க காரிய வெற்றி கிடைக்கும்.