17-11-25 முதல் 15-12-25 வரை
சுய கவுரவமும், புகழும் மிக முக்கியமாக கருதும் சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சூரிய பகவான் 4ல் சஞ்சரிப்பதால், எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். மன அழுத்தம், கவலை, வெறுப்பு விரக்தி வந்து நீங்கும்.உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். சுக்ரன் 3ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகள் விஷயத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்களை கவனமாக கையாளுங்கள். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபார ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். 8ல் சனி அஷ்டம சனியாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதம் ஏற்படும். இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. இருப்பினும் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 29, 30. டிசம்பர் 1.
பரிகாரம்: சிங்கிரி கோயில் உக்கிர நரசிம்மரை ஞாயிற்றுக்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.


