இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

சிம்மம்

Published: 17 Sep 2025

18-10-25 முதல் 16-11-25 வரை

எதையும் மாற்றும் வல்லமை படைத்த சிம்ம ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சூரிய பகவான் 3 ல் நீசபங்க ராஜயோக அமைப்பில் சஞ்சரிப்பதால், மாத முற்பகுதியில் சில பிரச்னைகள் இருந்தாலும் மாத பிற்பகுதியில் யோகமுண்டு. எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகளும், தாமதங்களும் ஏற்படும். பயணங்களில் கவனம் தேவை. தாயால் அனுகூலம் உண்டு. வீடு வாகனம், பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை.8ல் சனி இருப்பதால் வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது உங்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களில் மற்றவர்களுக்காக நீங்கள் தலையிடுவதை தவிர்க்கவும். தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.11ல் குரு இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். இருப்பினும் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். அவசர முடிவுகளை தவிர்க்கவும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். எதிர்பாராத அதிர்ஷ்டமும், திடீர் பணவரவும் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 2, 3, 4.

பரிகாரம்: ராமநாதபுரத்தில் உள்ள  ராஜராஜேஸ்வரி அன்னையை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

பிறந்தநாள் பலன்கள்