இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

சிம்மம்

Published: 16 Jul 2025

17-7-25 முதல் 16-8-25 வரை

தனது அதிகாரத்தால் எதையும் தனதாக்கி கொள்ளும் சிம்மராசி நண்பர்களே, உங்கள் ராசிநாதன் சூரிய பகவான் ராசிக்கு 12 ல் சஞ்சரிப்பதால் உங்கள் திறமைக்கு சவால்கள் உருவாகும். வீண் விரயங்கள், மருத்துவச் செலவுகள் ஏற்படும். சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சுக்ரன் பலம் பெறுவதால் மனோ பலம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். அரசால் அனுகூலம் உண்டு. செவ்வாய் ராசியிலே இருப்பதால் தாயால் அனுகூலம் உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி இருந்தாலும் உடல் நிலையில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். 7ல் ராகு இருப்பதால் கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்திற்குள் வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது.வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை கவனமாக கையாளுங்கள். குரு மற்றும் மூத்தோர் வழிபாடு நன்மை தரும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள்,சக ஊழியர்களால் ஆதாயம் இருந்தாலும் அவர்களை எச்சரிக்கையுடன் அணுகுவது நல்லது. எதிலும் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். பொறுமை, நிதானம், விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 12, 13, 14.

பரிகாரம்: நாமக்கல் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரை சனிக்கிழமை சென்று வணங்க தடைகள் பிரச்னைகள் குறைந்து வாழ்வு வளம் பெறும்.

பிறந்தநாள் பலன்கள்