search-icon-img
featured-img

கும்பம்

Published :

17-7-25 முதல் 16-8-25 வரை

கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடைய கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாகிய சுக்கிர பகவான் 4ல் பலம் பெறுவதால் தடைகள் பிரச்னைகள் குறைந்து வாழ்வு சுபிட்சம் பெறும். எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உயரும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். மனோ பலம் அதிகரிக்கும். அவ்வப்போது எதிர்காலம் பற்றிய பயம் வந்து நீங்கும். உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. சூரியன் 6 ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத அதிர்ஷ்டமும் தன வரவும் உண்டு. தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். வெளிநாட்டு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். இருப்பினும் யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். எதிலும் பொறுமை விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 28, 29, 30.

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை சனிக்கிழமை சென்று வழிபட எந்த சூழ்நிலையையும் எதிர்த்து வெற்றி கொள்ள முடியும்.