இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கும்பம்

Published: 17 Sep 2025

18-10-25 முதல் 16-11-25 வரை

பொறுமையே பெருமை தரும் என்பதை உணர்ந்து செயல்படும் கும்ப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 5 ல் குருவின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருப்பதால் எத்தனை தடைகள், பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எதிலும் நிதானம், பொறுமை, விழிப்புணர்வு அவசியம். குடும்பத்தில் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதாரங்களில் ஏற்றத்தாழ்வுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டாகும். தாயால் அனுகூலம் உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. 7ல் கேது இருப்பதால் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். மூத்தோர் மற்றும் குரு வழிபாடு நன்மை தரும். தொழில் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உயரதிகாரி உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார். தேவையற்ற வீண் விரயங்கள் உருவாகும் என்பதால் கவனம் தேவை.

சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 18, 19, 20, நவம்பர் 15, 16.

பரிகாரம்: ஆம்பூரில் உள்ள காட்டு வீர ஆஞ்சநேயரை சனிக்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.

பிறந்தநாள் பலன்கள்