search-icon-img
featured-img

மேஷம்

Published :

17-9-25 முதல் 17-10-25 வரை

துணிச்சலான காரியங்களை எளிதாக செய்யும் மேஷ ராசி அன்பர்களே, ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். 3ல் குரு இருப்பதால் உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். பயணங்களில் உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். தாய் உடல்நலனில் கவனம் தேவை. புதிய வீடு வாகனம் வாங்குதல், விற்பது முயற்சிகள் கைகூடும். 5ல் கேது இருப்பதால் குழந்தைகளால் சின்ன சின்ன பிரச்னைகள் வந்து நீங்கும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. கடன் தொல்லை அதிகரிக்கலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தாமதங்கள் இருந்தாலும் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. சனி 12ல் இருப்பதால் தந்தை உடல்நிலையில் கவனம் தேவை. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு இப்போது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை.

சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 26, 27, 28.

பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமை சென்று வழிபடுவது நன்மை தரும்.