17-7-25 முதல் 16-8-25 வரை
எதற்கும் துணிந்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் ராசிக்கு 5 ல் சஞ்சரிப்பதால் எல்லா பிரச்னைகளுக்கும் எளிதாக தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இதுவரை பொருளாதார நிலையில் இருந்த பிரச்னைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.புதன் 4ல் இருப்பதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. ஆடை ஆபரணம் சேரும். நிலம் மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். 5ல் கேது இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. சுக்கிரன் 2ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பும் ,ஆதரவும் அதிகரிக்கும். மனைவி வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். தடைகள், பிரச்னைகள் இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற மன குழப்பம் டென்ஷனை தவிர்க்க யோகா தியானம் பயில்வது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 3, 4, 5.
பரிகாரம்: சுவாமிமலை முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவதால் மனக்குழப்பம் குறைந்து, எதிலும் தெளிவு ஏற்படும்.