search-icon-img
featured-img

கடகம்

Published :

17-9-25 முதல் 17-10-25 வரை

வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்ந்து செயல்படும் கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 9 ல் சனியின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால், எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். 2 ல் கேது இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மனதில் தைரியம், தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தங்கநகை ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தாய் உடல்நலத்தில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் உண்டாகும். வீடு வாகனம் சீர்படுத்த செலவினங்கள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகள் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். எதிரிகளால் பிரச்னை இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். சனி வக்கிரம் பெற்றிருப்பதால் கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. தந்தை உடல்நிலையில் கவனம் தேவை தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள். பதவி உயர்வு ஊதிய உயர்வு தேடிவரும். விடா முயற்சி மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தரும்.

சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 4, 5, 6.

பரிகாரம்: பழனி முருகப் பெருமானை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.