இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கடகம்

Published: 17 Sep 2025

18-10-25 முதல் 16-11-25 வரை

கற்பனைத் திறமும், கவி நயம் மிகுந்த கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் உங்கள் ராசிக்கு 3ல் சந் சஞ்சரிப்பதால் வல்லமை அதிகரிக்கும். உங்களுடைய ஆளுமையால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கும். பேச்சில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மனோபலம் அதிகரிக்கும். தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்பு வந்து நீங்கும். குழந்தைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.7ல் சனி இருப்பதால் கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியது அவசியம். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். தந்தையால் அனுகூலம் உண்டு. குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு. 10ல் குரு இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படலாம். சிலருக்கு விரும்பத்தகாத இடம் மாற்றங்கள் உண்டாகும். பொறுமை தேவை. எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு

சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 31, நவம்பர் 1, 2.

பரிகாரம்: திருத்தேவன்குடி கற்கடேஸ்வரரை திங்கள் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

பிறந்தநாள் பலன்கள்