search-icon-img
featured-img

மகரம்

Published :

17-8-25 முதல் 16-9-25 வரை

கருணை உள்ளம் அதிகம் மிக்க மகர ராசி அன்பர்களே, உங்க ராசிக்கு யோகாதிபதியாகிய புதன் பகவான் 7 ல் இருந்து உங்கள் ராசியை பார்ப்பதால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். எதிலும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். சனி 3ல் இருப்பதால் உடன்பிறப்புகளால் மனக்கசப்புகள் இருந்தாலும், ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். எதிர்காலம் பற்றிய எதிர்மறை பயத்தை தவிர்க்கவும். தாய் உடல்நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் தொடர்பான செலவினங்கள் உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்படக்கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. திடீர் அதிர்ஷ்டம் உண்டு. கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். வாழ்வில் சின்ன சின்ன தடைகள் பிரச்னைகள் இருந்தாலும் சமாளிக்கும் பக்குவமும் இருக்கும். தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். தொழில் மற்றும் உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். உங்களைப்பற்றிய தவறான வதந்திகள் பரவும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.

சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 23, 24, 25.

பரிகாரம்: ஆரணி ஏரிகுப்பம் சனிபகவானை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.