17-11-25 முதல் 15-12-25 வரை
விடாமுயற்சி வெற்றி தரும் என்பதை உணர்ந்து செயல்படும் மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்கிர பகவான் மற்றும் புதன் பகவான், ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள் வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் தாய் உடல்நலனில் கவனம் தேவை. வீடு வாகனத்தை சீர் படுத்த செலவினங்கள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் உண்டு. குரு 7ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் அன்பும், ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. தந்தையின் செயல்பாடுகள் உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருக்கும். குரு மற்றும் மூத்தோரின் ஆசி கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு ஊதிய உயர்வு தேடி வரும். எதிர்பாராத தனவரவு உண்டு.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 10, 11, 12.
பரிகாரம்: ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயரை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.