17-11-25 முதல் 15-12-25 வரை
எதிலும் நிதானித்து செயல்பட்டு வெற்றி பெறும் மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் மாத முற்பகுதியில் உங்கள் ராசிக்கு ஆறில் சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பொருளாதாரநிலை உங்கள் தேவைக்கு ஏற்ப உயரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பயணங்களின் போது உங்களுடைய உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் சிறு இழப்புகள் வந்து நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் தேவை. தந்தைக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உங்கள் பணிகளில் அதிக கவனம் செலுத்துங்கள். எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும்.
சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 25, 26, 27.
பரிகாரம்: காஞ்சிபுரத்தில் உள்ள சித்திர குப்தரை புதன் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


