18-10-25 முதல் 16-11-25 வரை
இன்பமும் துன்பமும் வாழ்வின் இரு பக்கங்கள் என்பதை உணர்ந்து செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் 5ல் சஞ்சரிப்பதால் வாழ்வில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். இருப்பினும் எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. தடைகளை கண்டு தளர வேண்டாம். திடீர் பணவரவு உண்டு. உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிய நட்பு மலரும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும் பயணங்களில் கவனம் தேவை. சுக்ரன் நீசம் பெறுவதால் தாய் உடல் நலனில் கவனம் தேவை. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும். 5ல் புதன் இருப்பதால் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வாகன பயணங்களில் கவனம் தேவை. உங்களுக்கு தொடர்பு இல்லாத விஷயங்களில் மற்றவர்களுக்காக தலையிடுவதால் தேவையற்ற பிரச்னைகள் உருவாகும். ராகு 9ல் இருப்பதால் தந்தை உடல்நலனில் கவனம் தேவை. தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.
சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 29, 30, 31.
பரிகாரம்: மல்லசமுத்திரத்திலுள்ள பள்ளி கொண்ட பெருமாளை புதன் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.