17-7-25 முதல் 16-8-25 வரை
எந்த நிலையிலும் தன்னிலை மாறாத துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிர பகவான் ராசிக்கு 8ல் இருப்பதால் எந்த விஷயத்திலும் கவனம் தேவை. ஆளுமை திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. செவ்வாய் 11ல் இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டு. உங்கள் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. தங்க நகை ஆபரணச் சேர்க்கை உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தாய் உடல்நிலை சீராகும். உறவுகளால் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைக்கூடும். ராகு 5ல் இருப்பதால் குழந்தைகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். ஷேர் மார்க்கெட்டில் பார்ட்னர்களை அனுசரித்துசெல்வது நல்லது. கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னையை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. குரு 9 ல் இருப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டமும் தன வரவும் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உங்கள் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்துவதால் புகழ் பாராட்டு கிடைக்கும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 20, 21, 22.
பரிகாரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவதால் மனம் தெளிவு பெறும்.