இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

துலாம்

Published: 16 Sep 2025

17-9-25 முதல் 17-10-25 வரை

இனிமையான செயல்களால் மற்றவர்களை எளிதில் கவர்ந்திழுக்கும் துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிரன் கேதுவுடன் சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை. உங்கள் திறமைக்கு சவால் விடுக்கப்படலாம். எதையும் நிதானமாக கையாள்வது நல்லது. தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படும். மனக்குழப்பம் அதிகரிக்கும். எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். உடன் பிறப்புகளால் மனஸ்தாபங்கள் வர வாய்ப்புள்ளதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தங்க நகை ஆபரணங்களை கவனமாக கையாளுங்கள். பயணங்களின் போது உங்கள் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளுங்கள். தாய் உடல்நலனில் கவனம் தேவை. வீடு வாகன செலவினங்கள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். எதிரிகளால் பிரச்னை வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது அவசியம். எதிர்பாராத தடைகளும், பிரச்னைகளும் உண்டு. குரு 9ல் இருப்பதால் தந்தை உடல்நலனில் கவனம் தேவை. வெளிநாடு, வெளியூர் செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் கனவுகள் நிறைவேறும்.

சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 10, 11, 12.

பரிகாரம்: ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவபெருமாள் மற்றும் ராமானுஜரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

 

பிறந்தநாள் பலன்கள்