17-11-25 முதல் 15-12-25 வரை
எதிலும் சிந்தித்து செயல்படும் மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு அதிபதியாக செவ்வாய் பகவான்9 ல் பலம் பெற்று இருப்பதால் தெய்வ அருள் உங்களை காக்கும். இருப்பினும் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதில் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். தாயால் அனுகூலம் உண்டு. வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். 5ல் குரு இருப்பதால் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். எதிலும் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரம் முயற்சிகள் வெற்றி பெறும். வாழ்வில் சில தடைகள் பிரச்னைகள் வந்து நீங்கும். செவ்வாய் பலம் பெறுவதால் தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாட்டு தொடர்பால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.
சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 17, 18, 19. டிசம்பர் 15.
பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


