17-9-25 முதல் 17-10-25 வரை
எந்த சூழ்நிலையிலும் தெளிவாக சிந்தித்து செயல்படும் மீன ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாகிய செவ்வாய் பகவான் 8ல் சஞ்சரிப்பதால் எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் அதைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்து, நேர்மறை சிந்தனைகளை வளர்த்துகொள்ளுங்கள். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும்.உறவினர்களால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். தாய் உடல்நலனில் கவனம் தேவை. வீடு வாகனத்தை சீர்படுத்த செலவினங்கள் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். பூர்வீக சொத்தால் ஆதாயம் உண்டு. எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு. சூரி புதன் 7ல் சஞ்சரிப்பதால் கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் உயர்வுக்கு தந்தை உறுதுணையாக இருப்பார். பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிநாட்டு தொடர்பால் நன்மை உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் கோபத்தை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டு.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 24, 25, 26.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.