17-11-25 முதல் 15-12-25 வரை
தர்மத்தை நிலைநாட்டும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 3ல் ராகுவின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருப்பதால், எத்தனை தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாளாக வரவேண்டிய பணம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் தடைகள் இருந்தாலும் விடா முயற்சியால் வெற்றி பெறுவீர்கள். 4ல் சனி இருப்பதால் தாய் உடல்நலனில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு மருத்துவச் செலவுகள் வந்து நீங்கும். பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். ஷேர் மார்க்கட்டில் இழப்புகள் ஏற்படும். கணவன்,மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். கேது 9ல் இருப்பதால் தந்தை உடல்நலனில் கவனம் தேவை. கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். தொழில் மற்றும் உத்யோகத்தில் இடமாற்றம் செய்ய காத்திருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். தேவையற்ற வீண் விரயங்கள் இருப்பதால் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 8, 9, 10.
பரிகாரம்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் குருபகவானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


