18-10-25 முதல் 16-11-25 வரை
நட்புக்கு அதிக மதிப்பு கொடுக்கும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு யோகாதிபதியாக செவ்வாய் பகவான் 11 ல் சஞ்சரிப்பதால் எத்தனை தடைகள், பிரச்னைகள் வந்தாலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். தங்க நகை ஆபரண சேர்க்கை உண்டு. பயணங்களால் நன்மை உண்டு. சனி 11ல் இருப்பதால் தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்பும் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்வது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளுங்கள். ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் வர வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எதிரிகளால் பிரச்னைகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. இருப்பினும் பண விஷயங்களில் கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்டமும் திடீர் தன வரவுகள் உண்டு. கேது 9ல் இருப்பதால் தந்தையுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிதுர்வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் மற்றும் உத்யோக ரீதியாக பயணங்கள் உண்டாகும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். நண்பர்களால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை.
சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 10, 11, 12.
பரிகாரம்: சுவாமிமலை முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.