search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

18-10-25 முதல் 16-11-25 வரை

எதிலும் உள்ள மறைபொருள் ரகசியங்களை வெளிப்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் ராசிக்கு 12ல் சஞ்சரிப்பதால் எதிலும் கவனம் தேவை. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியான சூழல் உருவாகும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். ராகு 4ல் இருப்பதால் தாய் மற்றும் உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான பிரச்னைகள் உருவாகும். சனி 5ல் இருப்பதால் குழந்தைகள் உடல்நிலையில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்களை கவனமாக கையாளுங்கள். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். வாழ்வில் சிறு தடைகள், பிரச்னைகள் இருந்தாலும் சமாளித்து விடுவீர்கள். தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். வெளிநாட்டுத் தொடர்பால் ஆதாயம் உண்டு. தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். தொழில் மற்றும் உத்யோக ரீதியாக பயணங்கள் செல்ல நேரிடலாம். நண்பர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மீகப் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக செலவினங்கள் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: நவம்பர் 8, 9, 10.

பரிகாரம்: தர்மபுரி அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவரை செவ்வாய் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.