17-8-25 முதல் 16-9-25 வரை
எதிலும் விடாமுயற்சியுடன் முயன்று வெற்றி பெறும் விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் செவ்வாய் பகவான் உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதையும் சாதிக்கும் வல்லமை அதிகரிக்கும். உங்கள் புகழ் செல்வாக்கு அந்தஸ்து உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். உடன்பிறப்பு களால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பயணங்களால் வெற்றி உண்டு. தாயால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான முயற்சிகள் கைகூடும். சனி 5 ல் இருப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்படும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். தந்தையால் அனுகூலம் உண்டு. தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். 10ல் சூரியன் திக் பலம் பெறுவதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர்வு ஏற்படும். உயரதிகாரிகள் மட்டும் சக ஊழியர்கள் சாதகமாக இருப்பார்கள்.உங்கள் செல்வாக்கு உயரும். உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 18, 19, 20. செப்டம்பர் 15, 16.
பரிகாரம்: பவானி சங்கமேஸ்வரரை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.