search-icon-img
featured-img

ரிஷபம்

Published :

18-10-25 முதல் 16-11-25 வரை

விடாமுயற்சியே வெற்றி தரும் என்பதை உணர்ந்து செயல்படும் ரிஷபராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிர பகவான் உங்கள் ராசிக்கு 5ல் நீசம் பெறுவதால் யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. பொருளாதார நிலை தேவைக்கு ஏற்ப உயரும். எதிர்பாராத செலவினங்கள் உண்டு. உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டு. எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு. 4 ல் கேது இருப்பதால் தாயின் உடல் நலனில் கவனம் தேவை.வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் அதிகரிக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. தடைகள், பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். தந்தை உடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சனி 11ல் இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக மாறுவார்கள். நீண்டநாளாக வரவேண்டிய பதவி உயர்வு ஊதிய உயர்வு வந்துசேரும். உங்களுடைய செயல்பாடுகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: அக்டோபர் 27,28,29.

பரிகாரம்: சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.