இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

ரிஷபம்

Published: 16 Sep 2025

17-9-25 முதல் 17-10-25 வரை

உங்களைச் சுற்றியுள்ள நல்லவர்களை உணர்ந்து கொள்ளும் திறன் படைத்த ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பகவான் கேதுவுடன் இருப்பதால், எதிலும் கவனம் தேவை. அவசர முடிவுகளை தவிர்க்கவும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எடுக்கும் முயற்சிகள் இரண்டாவது முறை வெற்றி பெறும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தாய் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வீடு மற்றும் வாகனங்களால் ஆதாயம் உண்டு. குழந்தைகளின் செயல்பாடுகள் பெருமைப்பட கூடியதாக இருக்கும். புத்தியை ஸ்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். செவ்வாய் 6 ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வாழ்வில் எதிர்பாராத தடைகள், பிரச்னைகள் வந்து நீங்கும். தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். சனி 11 ல் இருப்பதால் தொழில், உத்யோகத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக மாறுவார்கள். பதவி உயர்வு ஊதிய உயர்வு தேடிவரும். திடீர் பணவரவு உண்டு. முக்கிய நபர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 29, 30. அக்டோபர் 1, 2.

பரிகாரம்: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

 

பிறந்தநாள் பலன்கள்