17-11-25 முதல் 15-12-25 வரை
சூழ்நிலைக்கு தகுந்தார் போல் தன்னை எளிதாக மாற்றிக் கொள்ளும் கன்னிராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் உங்கள் ராசிக்கு 3ல் சஞ்சரிப்பதால், எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனோபலம் அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு. சுக்ரன் பலம் பெறுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் உண்டாகும். இனிய பேச்சால் மற்றவரை எளிதில் கவர்வீர்கள். வீடு வாகனம் சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகள் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழி நடத்திச் செல்ல வேண்டிய அவசியம். தேவையற்ற வீண் மனக்குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. 7ல் சனி இருப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. புதிய வியாபாரம் முயற்சிகளை தவிர்க்க வேண்டியது அவசியம். வாழ்வில் சின்ன, சின்ன தடைகள் பிரச்னைகள் வந்தாலும் எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வெளிநாட்டு தொடர்பான ஆதாயம் உண்டு. குரு 10ல் இருப்பதால் தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்: டிசம்பர் 2, 3, 4.
பரிகாரம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை புதன் கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.


