இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கன்னி

Published: 16 Jul 2025

17-8-25 முதல் 16-9-25 வரை

எதிலும் நிதானமாக சிந்தித்து செயல்படும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசிநாதன் புதன் பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 12ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற வீண் விரயங்கள் மருத்துவ செலவினங்கள் ஏற்படும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள். பொருளாதார நிலையில் உயர்வு உண்டாகும். இருப்பினும் எந்த சூழ்நிலையையும் சமாளித்து வெற்றி பெறும் ஆற்றல் உங்களிடம் இருக்கும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடன்பிறப்பு களால் ஆதாயம் உண்டு. வெளியூர் பயணங்கள் நன்மை தரும். புது வாகனம் அதற்கான முயற்சிகள் கைகூடும். தாயால் அனுகூலம் உண்டு. உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வழக்கு தொடர்பான விஷயங்கள் சாதகமாக அமையும். குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. பூர்வீக சொத்து விஷயங்களில் கவனமாக கையாளுங்கள்.எதிரிகளால் பிரச்னை வந்து நீங்கும். சனி 7ல் இருப்பதால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்கள் நன்மை தரும். தந்தையால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தந்தை உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பார். 10ல் இருப்பதால் குரு தொழில் மற்றும் உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில் உத்யோக ரீதியாக பயணங்கள் உண்டு. சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். இரண்டு தொழில் செய்பவருக்கு வெற்றி உண்டு. நண்பர்களால் ஆதாயம் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 11,12,13.

பரிகாரம்: ஸ்ரீ பெரும்புதூர் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் ராமானுஜரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

 

பிறந்தநாள் பலன்கள்