(அவிட்டம் 3,4 ம் பாதம், சதயம்,பூரட்டாதி 1, 2, 3 ம் பாதம்)
தர்மம் செய்வதை தன் கடமையாக நினைக்கும் கும்ப ராசி அன்பர்களே, சனி பகவான் உங்கள் ராசிக்கு 2 ல் குடும்பச் சனியாக சஞ்சரிப்பதால் பேச்சில் அதிக கவனம் தேவை, வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதார நிலை ஏற்றத்தாழ்வு வர வாய்ப்புள்ளதால் சிக்கனம் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். 14-5- 2025 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 5 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் லாபம் உண்டு. அறிவுத்திறன் அதிகரிக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஜென்ம ராகுவின் தீய பலன்கள் குறையும்.18- 5- 2025 முதல் ராகு கேது முறையே 1,7ல் சஞ்சரிப்பது சாதகம் இல்லை என்றாலும், குருவின் ராகுவின் மீது படுவதால் ராகுவின் தீய பலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். இருப்பினும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் நிறுவனம் மக்களிடையே பிரபலம் அடையும்.மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை உண்டாகும். ஆசிரியர்கள் பெற்றோர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். நல்ல மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பீர்கள்.அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சகாக்கள் ஆதரவுண்டு.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள்.புதிய வாய்ப்புகள் தேடி வரும். மக்களிடையே பிரபலம் அடைவீர்கள்.
பரிகாரம்: மொரப்பூரில் உள்ள முனீஸ்வரனை சனிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.