(புனர்பூசம் 4 ம் பாதம், பூசம், ஆயில்யம்)
தாய்மை உணர்வும், அன்பும், பாசமும் மிக்க கடக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 9ல் சனி பகவான் சஞ்சரிப்பதால், அஷ்டமச்சனியால் இதுவரை இருந்த தடைகள், பிரச்னைகள் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். இழந்த செல்வத்தை மீண்டும் பெறுவீர்கள். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும். 14-5-2025 குரு பகவான் உங்கள் ராசிக்கு 12ல் விரைய குருவாக சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் வந்து நீங்கும். ஆலயங்களின் திருப்பணிக்கு நன்கொடை செய்வதும், அன்னதானம் செய்வதும் நன்மை தரும்.18- 5-2025 க்கு பிறகு ராகு கேது பகவான் முறையே 8,2 ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வரும் என்பதால் சிக்கனம் மற்றும் சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. பொறுமை, நிதானம், அவசியம். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல மாற்றம் முன்னேற்றம் ஏற்படும். புதிய வியாபார முயற்சிகள் கைகூடும். இருப்பினும் எதிலும் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு இதுவரை இந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பர்.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை திங்கட்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.