(உத்திராடம் 2,3,4 ம் பாதம், திருவோணம், அவிட்டம்1,2 ம் பாதம்)
நீதி நேர்மை நியாயம் என்பதில் அதிக நம்பிக்கை உடைய மகர ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு சனி பகவான் ஏழரைச் சனியாக இருந்து விலகி 3ல் சஞ்சரிப்பதால் மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. 14-5-2025 முதல் குரு பகவான் 6ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாளாக வங்கிகளில் கடனுக்காக முயற்சி செய்து கொண்டிருப்பது கடன் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. நீண்ட நாட்களாக புதிய வேலைக்கு முயற்சி செய்து புதிய வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.18- 5- 2025 முதல் ராகு கேது முறையே 2,8 ல் சஞ்சரிப்பதால் பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வு வர வாய்ப்புள்ளதால் சீக்கிரம் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாகன பயணங்களில் கவனம் தேவை. சனிபகவான் சாதகமாக இருப்பதால் தீய பலன்கள் குறைந்து நற்பலன்கள் அதிகரிக்கும்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். வியாபாரத்துக்காக முயற்சித்து வந்த கடன் கிடைக்கும். கூட்டாளிகளை கவனமாக கையாளுங்கள். உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சகா ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. புதிய வேலைக்கான முயற்சிகள் கைக்கூடும். பணிச்சுமை அதிகரிக்கும்.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள். கலைத்துறையினருக்கு தற்போது உள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.
பரிகாரம்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.