(மிருகசீரிடம் 3, 4 ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 ம் பாதம்)
எந்த சூழ்நிலையையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 10 ல் சனி பகவான் கர்ம சனியாக சஞ்சரிப்பதால், எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். எந்த சூழலையும் நிதானமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.14-5- 2025 க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம குருவாக சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். கடந்த கால எதிர்மறையான விஷயங்களை நினைத்து கவலைப்படுவதை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். எந்த சூழ்நிலையையும் நிதானமாக கையாளுங்கள். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.18- 5- 2025 ராகு கேது பகவான் முறையே 9,3 ல் சஞ்சரிப்பதால் தந்தை உடல்நிலையில் கவனம் தேவை. பிதுர் வழி சொத்து பிரச்னைகள் உருவாகும். கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் ஈடேறும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லும் ஆற்றல் உருவாகும்.வியாபாரிகளுக்கு உங்கள் பணிகளை திட்டமிட்டு செய்ய பாருங்கள். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உத்யோகத்தில் கவனம் தேவை. எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும்.மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர் சொல் கேட்டு நடக்க வேண்டியது அவசியம்.அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்லுங்கள். சகாக்களை கண்காணிப்பில் வைத்துக் கொள்வது நல்லது.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். பொறுமை தேவை.
பரிகாரம்: பரிக்கல்லில் உள்ள நரசிம்மரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.