(மகம், பூரம், உத்திரம் 1 ம் பாதம்)
நெஞ்சுறுதியும், ஆளுமை திறனும், கம்பீரமும் மிக்க சிம்மராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 8ல் சனி பகவான் அஷ்டம சனியாக சஞ்சரிப்பதால் எந்த விஷயத்திலும் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் வந்து நீங்கும். குருவின் சஞ்சாரம் அடுத்த ஒரு வருடம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் பெரிதளவில் கவலைப்பட தேவையில்லை. 14-5-2025க்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ல் சஞ்சரிப்பதால் அஷ்டமச்சனி மற்றும் ஜென்ம கேதுவின் தாக்கம் குறையும். இருப்பினும் எந்த விஷயத்தையும் ஆழம் தெரியாமல் காலை விட வேண்டாம். கவனத்துடன் செயல்படுவது நல்லது. எதிர்பாராத பண வரவு உண்டு. எதையும் சமாளிக்கும் ஆற்றல் உருவாகும். தேவையான நேரத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியத்திற்கான முயற்சிகள் வெற்றி பெறும்.18-5-2025 முதல் ராகு கேது பகவான் முறையே உங்கள் ராசிக்கு 7,1 ல் சஞ்சரிப்பதால் கணவன் மனைவி விவகாரத்தில் வெளி ஆட்களின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. சில நேரங்களில் மன குழப்பம் அதிகரிக்கும். வெறுப்பு விரக்தி உண்டாகும். எதிர்கால் பற்றிய எதிர்மறை சிந்தனைகள் மேலோங்கும். நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். மன அமைதிக்கு யோகா தியானம் பயில்வது நன்மை தரும்.வியாபாரிகளுக்கு கூட்டாளிகளை கண்காணிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். உத்யோகஸ்தர்கள்: உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விஷயங்களில் கவனம் தேவை.
பரிகாரம்: சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள சிங்கப்பெருமாளை ஞாயிற்றுக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.