search-icon-img
featured-img

துலாம்

Published :

(சித்திரை 3, 4 ம் பாதம், சுவாதி,விசாகம் 1, 2, 3 ம் பாதம்)

எந்நிலையிலும் தன்னிலை மாறாத துலா ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 6 ல் சனி பகவானின் சஞ்சாரம் இருப்பதால், எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். புகழ் செல்வாக்கு அந்தஸ்து உயரும். பொருளாதார நிலை உயரும். பல வகையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். 14-5-2025 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 9 ல் சஞ்சரிப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும். எல்லா வகையிலும் நல்ல மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படும். தெய்வ அனுகூலம் உண்டு. அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பிதுர் வழி சொத்து விஷயங்கள் சாதகமாக அமையும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பு காடுகளில் நாடு செல்வதற்கான முயற்சிகள் கைகூடும்.18- 5- 2025 முதல் ராகு கேது பகவான் முறையே 5,11 ல் சஞ்சரிப்பதால் குழந்தைகள் உடல் நலனில் கவனம் தேவை. குழந்தைகளின் நட்பு வட்டத்தை கண்காணிப்பில் வைத்து வழிநடத்திச் செல்வது நல்லது. நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். வியாபாரிகளுக்கு புதிய வியாபாரம் முயற்சிகள் கைகூடும். பல கிளைகள் தொடங்குவதற்கான சூழல் உருவாகும். உங்கள் நிறுவனம் பிரபலமடையும்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். உங்கள் நிறுவனத்தில் நீங்கள் பிரபலம் அடைவீர்கள்.மாணவர்களுக்கு: கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். விளையாட்டுத் துறையிலும் சாதிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார். உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பிரபலமாவதற்கான சூழல் உருவாகும்.

பரிகாரம்: ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ரங்கநாதரை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.