search-icon-img
featured-img

மீனம்

Published :

(பூரட்டாதி 4 ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

அன்பாலும் பேச்சாலும் மற்றவர்களை எளிதாக கவரும் மீனராசி அன்பர்களே, சனிபகவான் உங்கள் ராசியிலேயே ஜென்ம சனியாக சஞ்சரிப்பதால் எதிர்மறை சிந்தனைகளை வீண் குழப்பத்தை தவிர்ப்பது நல்லது. நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். யோகா தியானம் பயிற்சி செய்வது மன அமைதி தரும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கடின உழைப்பு மேன்மை தரும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.14-5-2025 முதல் குரு பகவான் 4 ல் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் தடை தாமதம் வந்து நீங்கும். எந்த விஷயத்தையும் நாசூக்காக கையாளுங்கள்.18-5-2025 முதல் ராகு கேது பகவான் முறையே 12,6ல் சஞ்சரிப்பதால், வீண் விரயங்கள் குறையும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும். சனி மற்றும் குருவால் வரக்கூடிய தீய பலன்களை சமாளிக்கக்கூடிய ஆற்றல் உண்டாகும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பொருளாதார நிலையில் உயர்வு உண்டு.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் சுணக்கம் இருந்தாலும் லாபம் உண்டு. புதிய வியாபார முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மற்றும் பணியாளர்களை கவனமாக கையாளுங்கள்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது . பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுக்கான முயற்சிகள் வெற்றி பெறும்.அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.

பரிகாரம்: திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.