search-icon-img
featured-img

தனுசு

Published :

(மூலம், பூராடம், உத்திராடம் 1 ம் பாதம்)

ஒழுக்கமே உயர்வு தரும் என்பதை உணர்ந்து செயல்படும் தனுசு ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 4 ல் சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். இந்த வருடம் முழுவதும் குரு பகவானின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் பெரிதளவில் கவலைப்பட தேவையில்லை.14-5- 2025 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நல்ல மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீட்டில் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். அதிர்ஷ்டமும் தெய்வ அனுகூலமும் தேடி வரும்.18- 5- 2025 முதல் ராகு கேது பகவான் முறையே 3,9 ல் சஞ்சரிப்பதால் எத்தனை தடைகள் வந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். தைரியம் தன்னம்பிக்கை உற்சாகம் அதிகரிக்கும். எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உருவாகும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. வெளியூரில் இருந்து நீங்க எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். பிதுர் வழி சொத்து பிரச்னைகள் உருவாகும் வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. உங்கள் நிறுவனம் மக்களிடையே பிரபலம் அடையும்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு தேடி வரும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைப்பார்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சகாக்கள் சாதகமாக செயல்படுவார்கள். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: குருவாயூரில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.