(விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை)
ஆழ்ந்த அறிவும் ஆராய்ச்சி திறனும் உடைய விருச்சிக ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 5 ல் சனி பகவானின் சஞ்சாரம் இருப்பதால் இதுவரை இருந்த தடைகள் பிரச்னைகள் நீங்கும். எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க முடியாமல் திணற கூடிய சூழல் உருவாகும். ஷேர் மார்க்கெட்டில் இழப்புகள் ஏற்படும். எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம்.14-5-2025 முதல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 8ல் அஷ்டம குருவாக சந்தர்ப்பதால் எதிலும் கவனம் தேவை. வாகன பயணங்களில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த விஷயத்தையும் பொறுமையாக கையாளுங்கள். பணம் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அதிக கவனம் தேவை. எதிர்பாராத அதிர்ஷ்டமும் உண்டு.18-5-2025 முதல் ராகு கேது பகவான் முறையே 4,10ல் சஞ்சரிப்பதால் வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. தொழில் மற்றும் உத்தியோகத்தில் கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பொறுமை தேவை. உத்யோகத்தில் ஒரு நிரந்தரமற்ற சூழல் உருவாகும்.சில நேரங்களில் உங்கள் குறைவான பணிகளை செய்ய நீங்கள் நிர்பந்திக்கப்படலாம்.வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. கூட்டாளிகள் மற்றும் பணியாட்களை வழி நடத்திச் செல்வது நல்லது. எதிலும் திட்டமிட்டு செயல்படுங்கள். மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை என்ற உடனடியாக மருத்துவரை அனுப்புவது நல்லது. ஆசிரியர் மற்றும் பெற்றோர் சொல் கேட்டு நடக்க வேண்டிய அவசியம். அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை முழுமையாக நம்ப வேண்டாம். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: தர்மபுரி அருகே அதியமான் கோட்டையில் உள்ள சொர்ணகர்ஷண பைரவரை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.