இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

ரிஷபம்

Published: 12 Apr 2025

(கார்த்திகை 2, 3, 4 ம் பாதம், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2, 3 ம் பாதம்)

அன்பும் பாசமும் நிறைந்த ரிஷப ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 11 ல் சனி பகவான் சஞ்சரிப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் நட்பும் கிடைக்கும். அதன் மூலம் ஆதாயம் உண்டு. திருமணம், குழந்தை பாக்கியம், சொத்து சேர்க்கை உண்டு.14-5- 2025 க்கு பிறகு குரு பகவான் 2 ல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலையில் உயர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் இனிய பேச்சால் மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள். 18- 5- 2025 முதல் ராகு கேது பகவான் முறையே 10-4 ல் சஞ்சரிப்பதால் தொழிலில் மாற்றங்கள் நன்மை தரக்கூடியதாக இருக்கும். எதையும் வெல்லக்கூடிய ஆற்றல் உண்டு. உறவுகளால் மனக்கசப்புகள் வந்து நீங்கும். வீடு வாகனம் சொத்து தொடர்பான செலவினங்கள் உண்டு. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.விளையாட்டுத்துறையிலும் சாதனை படைப்பார்கள். வியாபாரிகளுக்கு புதிய வியாபாரம் முயற்சிகள் கை கூடும். கூட்டாளிகள் மற்றும் பணியாட்களால் ஆதாயம் உண்டு. உங்கள் நிறுவனம் பிரபலம் அடையும்.உத்யோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகள், சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையிடம் நெருக்கம் அதிகரிக்கும். தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். சகாக்கள் சாதகமாக செயல்படுவார்கள். கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வீர்கள். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சம்பள விகிதம் உயரும்.

பரிகாரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமியை வெள்ளிக்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.

பிறந்தநாள் பலன்கள்