(உத்திரம் 2,3,4 ம், அஸ்தம், சித்திரை 1,2 ம் பாதம்)
எதிலும் தந்திரமாக செயல்படும் கன்னி ராசி அன்பர்களே, உங்கள் ராசிக்கு 7 ல் சனிபகவான் கண்டகச் சனியாக சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமை நிதானம் விழிப்புணர்வு அவசியம். எதிர்மறை சிந்தனை தவிர்த்து நேர்மறை சிந்தனை வளர்த்துக் கொள்ளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. வியாபார ரீதியான புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது.14-5- 2025 க்கு பிறகு குரு பகவான் 10 ல் சஞ்சரிப்பதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் அதிக கவனம் தேவை. உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் பணிகளில் சிரத்தையுடன் செயல்படுங்கள். எதிலும் காலதாமதத்தை தவிர்க்கவும். சில நேரங்களில் உங்கள் தகுதிக்கு குறைவான பணிகளை செய்ய நிர்பந்திக்கப்படலாம். பொறுமை தேவை. 18- 5- 2025 முதல் ராகு கேது பகவான் முறையே 6, 12 ல் சஞ்சரிப்பதால் கண்டகச் சனி மற்றும் 10 மிட குருவின் தீய பலன்கள் குறையும். எந்த சூழ்நிலையும் சமாளிக்கும் திறன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்னை வந்து நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் தடை இருந்தாலும் விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளை அடையாளம் கண்டு வெற்றி கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் உடனடியாக மருத்துவரை அனுப்புவது நல்லது. தேவையற்ற நட்பில் இருந்து விலகி இருங்கள். அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. சகாக்களை கவனமாக கையாளுங்கள். மக்களை அணுகும் போது கவனம் தேவை.கலைத்துறையினருக்கு தற்போதுள்ள வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். புதிய வாய்ப்புகள் தாமதமாகலாம். சம்பள விகிதத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: சிங்கிரி கோவிலில் உள்ள நரசிம்மரை புதன்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.