(விசாகம் 4 ம் பாதம், அனுஷம், கேட்டை)
உலகின் நுட்பமான ரகசியங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் உடைய விருச்சிக ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு 5 ல் சஞ்சரித்து, குழந்தை பாக்கியத்துக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் குழந்தை பாக்கியம் கிடைப்பது, பூர்வீக சொத்தால் ஆதாயம், ஷேர் மார்க்கெட்டில் லாபம், திருமணம் போன்ற சுப காரியங்கள் தந்த குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 6 ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. நீண்ட நாட்களாக வங்கி கடனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு வங்கி கடன் கிடைக்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குரு பகவான் தனது 5 ம் பார்வையால் 10 ஐ பார்ப்பதால் உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்க கால தாமதம் ஆனாலும் பொறுமையுடன் காத்திருந்தால் நிச்சயம் வெற்றி உண்டு. குரு பகவான் தனது 7 ம் பார்வையால் 12ஐ பார்ப்பதால் சுபச் செலவினங்கள் அதிகரிக்கும். வீடு மனை வாகனம் வாங்குவீர்கள். குரு பகவான் தனது 9 ம் பார்வையால் 2 ஐ பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தலைமையை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினர் உடன் பணி புரிபவர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது.
பரிகாரம்: திருப்போரூர் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையில் சென்று வழிபடுவது நன்மை தரும்.