28.4.24 முதல் 4.5.24 வரை
உடல் உழைப்பாலும், மன தைரியத்தாலும் வெற்றி பெறுவீர்கள். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும் சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கடன் பிரச்னைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் வெளியூர் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட மனோ தைரியம் கூடும்.