21.4.24 முதல் 27.4.24 வரை
அறிவுத்திறன் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனதை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சின்ன விஷயங்களில் கூட மன நிறைவு உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அலுவலகத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்களுக்கு கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு பழைய பகைகள் மாறும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுத்த முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சாதுரியமான பேச்சால் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.
பரிகாரம்: குல தெய்வத்தை வணங்கிவர எல்லா தடைகளும் நீங்கி காரிய அனுகூலம் உண்டாகும்.